அமரகீர்த்தி எம்.பி கொலை தொடர்பில் கைதானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகாிப்பு

Thursday, 23 June 2022 - 8:28

%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+32+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று பிற்பகல் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறறை ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.