‘விக்ரம்’ ஓடிடி வெளியீட்டு திகதி அறிவிப்பு

Thursday, 23 June 2022 - 9:05

%E2%80%98%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99+%E0%AE%93%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'விக்ரம்' வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தில் முன்னணி நட்சத்திரங்களான பகத் ஃபாசில், விஜய் சேதுபதி, சூர்யா என பலர் நடித்திருந்தனர்.

கடந்த ஜூன் 3 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ள இப்படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

உலகளவில் 370 கோடி ரூபாவுக்கு (இந்திய நாணய மதிப்பில்) மேல் வசூலித்துள்ளது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் ஓகஸ்ட் மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியானது.

எனினும், தற்போது எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி ஓடிடியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

விக்ரம் படத்தின் டிஜிட்டல் உரிமை 98 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓடிடி வெளியீட்டு உரிமையை டிஸ்னி ப்ளஸ் ஹொட்ஸ்டார் வாங்கியுள்ளது.