நாளை பெற்றோல் கப்பல்: நாளை மறுதினம் டீசல் கப்பல்

Thursday, 23 June 2022 - 9:46

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D
பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி,  நாளை மறுதினம் முதல் வழமைப் போல பெற்றோலை விநியோகிக்க முடியும் என இலங்கை கனிய எண்ணெய் தனியார் ஊர்தி தாங்கி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

டீசல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை மறுதினம் நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக, இன்று (23) பெற்றோல் கப்பல் இலங்கை வந்தடையும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நாளைய தினமே குறித்த கப்பல் நாட்டை வந்தடையுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நாடு பூராகவும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக பகலிரவாக பொதுமக்கள் தொடர்ந்து வாகனங்களுடன் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பல நாட்கள் காத்திருந்து இன்னும் எரிபொருள் கிடைக்காத சம்பவங்களும் பதிவாகியுள்ளன.