இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான விசேட தூதுக்குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
இந்த குழுவினர் விசேட விமானத்தின் ஊடாக இன்று(23) முற்பகல் 9.20க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த குழுவினர் விசேட விமானத்தின் ஊடாக இன்று(23) முற்பகல் 9.20க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்திய நிதி அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் திணைக்களத்தின் செயலாளர் அஜய் சேத், இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வி. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சை சேர்ந்த இந்து சமுத்திரப் பிராந்தியத்தின் இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே ஆகியோர் இந்த விஜயத்தின் போது வெளியுறவு செயலாளருடன் இணைந்து வருகை தந்துள்ளனர்.
இந்த விஜயத்தின் போது இந்தியத் தூதுக்குழுவினர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளனர்.
நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால உதவித் தேவைகள் குறித்து தூதுக்குழுவினர் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.