இலங்கை - நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர்களுக்கு இடையில் சந்திப்பு

Thursday, 23 June 2022 - 11:34

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+-+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
ருவாண்டாவின் கிகாலியில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் ஒரு அம்சமாக, வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் நனையா மஹூதா ஆகியோருக்கு இடையில் நேற்று (22) இருதரப்பு சந்திப்பொன்று இடம்பெற்றது.

தற்போது கொழும்பில் சர்வதேச நாணய நிதியத்துடன் இடம்பெற்று வரும் பணியாளர் மட்ட கலந்துரையாடல்கள் மற்றும் உணவு, எரிபொருள் மற்றும் மருந்து விநியோகம் தொடர்பாக இருதரப்பு நன்கொடையாளர்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களிடமிருந்து நாடு பெற்றுக் கொள்ளும் ஆதரவு குறித்து வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சரிடம் விளக்கினார்.

இதன்போது, அடுத்த சில வாரங்களில் நிதியைக் கட்டுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக் காட்டினார்.

நியூசிலாந்து மற்றும் பொதுநலவாய நாடுகளின் ஆதரவு தொடர்பில் ஆராய்வதற்கு நியூசிலாந்து வெளிவிவகார அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.

இலங்கையின் பால் கைத்தொழில் மற்றும் விவசாயம் சார்ந்த கைத்தொழில்களின் அபிவிருத்தி  தொடர்பில் நியூசிலாந்தின் உதவியை வெளிவிவகார அமைச்சர் கோரினார்.

அத்துடன், கொவிட்-19 தாக்கத்தினால் இலங்கையில் பொருளாதார சவால்கள் எவ்வாறு மோசமடைந்துள்ளன என்பதை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் விளக்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.