நாட்டை வந்தடைந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பானது, கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30க்கு ஆரம்பமானது.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாட்ரா, இந்திய பிரதான பொருளாதார ஆலோசகர் வீ. ஆனந்த் நாகேஸ்வரன் மற்றும் இந்திய பொருளாதார அலுவல்கள் திணைக்களத்தின் செயலாளர் உள்ளிட்ட தூதுக்குழுவினர், இந்திய விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானத்தினூடாக இன்று முற்பகல் 9.20க்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இதனையடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்து நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பான விடயங்கள் குறித்து ஆராய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தற்சமயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாட்ரா உள்ளிட்ட தூதுகுழுவினர் கலந்துரையாடி வருகின்றனர்.
இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக இலங்கை கோரியுள்ள நிலையில், இந்திய தூதுக்குழுவினர் இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.