டயர் தட்டுப்பாட்டால் 600 இ.போ.ச பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

Thursday, 23 June 2022 - 15:32

%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+600+%E0%AE%87.%E0%AE%AA%E0%AF%8B.%E0%AE%9A+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
வாகனங்களுக்கான டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையினால் பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச, டயர்கள் கிடைப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பேருந்துகளுக்கு, அரச பேருந்து சாலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.