நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதி

Wednesday, 29 June 2022 - 16:32

%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
நகைச்சுவை நடிகர் வெங்கல்ராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்டு வந்த வெங்கல்ராவ் திடீரென ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை அணியில் ஒருவராக அறியப்பட்ட வெங்கல்ராவ், சண்டை கலைஞராகவும் நடித்துள்ளார்.

'பணக்காரன்', 'ராஜாதி ராஜா', அமிதாப், தர்மேந்திரா உட்பட பல பல படங்களில் வெங்கல் ராவ் நடித்துள்ளார்.

வடிவேலுவுடன் தொடர்ந்து 30 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் வெங்கல்ராவ். வடிவேலு சினிமாவில் ஒதுங்கியிருந்த காலக்கட்டத்தில் அவரது அணியில் உள்ள பல நடிகர்களும் சினிமா வாய்ப்பில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டனர்.

அதில் வெங்கல் ராவும் ஒருவர். இந்நிலையில் வடிவேலு மீண்டும் களம் இறங்கிய பிறகு பழைய ஆட்களையும் தனது கூட்டணியில் சேர்த்து வருகிறார். இப்போது சுராஜ் இயக்கி வரும் 'நாய்சேகர் ரிட்டன்ஸ்' படத்திலும் வெங்கல்ராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.