ராஜஸ்தானில் தலைதுண்டிக்கப்பட்டு ஒருவர் கொலை பயங்கரவாத சம்பவமா என விசாரணை

Wednesday, 29 June 2022 - 19:24

%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE+%E0%AE%8E%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88
ராஜஸ்தான் மாநிலத்தின், உடைபூர் மாவட்டத்தில், தையல்கடை நடத்திவரும் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் அங்கு தொடர்ந்தும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நேற்று இந்த கொலை சம்பவம் இடம்பெற்றதையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்படுத்த காவல்துறையும், இராணுவத்தினரும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அண்மையில் பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினர் நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்த கொலை ஊடாக பதில் வழங்கியுள்ளதாக கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் காணொளி ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இது பயங்கரவாத சம்பவமா என்ற கோணத்திலும் காவல்துறை விசாரனைகளை முன்னெடுத்துள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் உறுப்பினர் நுபுர் ஷர்மா, அண்மையில் இடம்பெற்ற செவ்வி ஒன்றின் போது, இஸ்லாமிய மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.