அந்தமான் கடல் பகுதியில் நில அதிர்வு!

Wednesday, 06 July 2022 - 7:51

%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%21
அந்தமான் கடல் பகுதியில் இன்று காலை மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது.

எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஏற்கனவே கடந்த இரு தினங்களில் அந்தமான் பகுதிகளில் சுமார் 10 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

போர் பிளேர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் அதிக அளவில் நில அதிர்வு ஏற்படக்கூடிய மண்டலங்களில் அமைந்துள்ளன.

இதன்காரணமாக இந்த பகுதிகளில் அதிகமாக நில அதிர்வுகள் பதிவாகி வருகின்றன.