இங்கிலாந்தில் பொரிஸ் ஜோன்சன் கடும் நெருக்கடி!

Thursday, 07 July 2022 - 8:47

%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%21+
இங்கிலாந்தில் போரிஸ் ஜோன்சன் தலைமையிலான பழமைவாத கட்சி அரசாங்கத்தில் இருந்து மேலும் 2 அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

இதனையடுத்து கட்சியில் பிரதமருக்கான ஆதரவு குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் துணை அமைப்பாளராக செயற்பட்டு வந்த கிறிஸ் பின்ஷர், கடந்த புதன்கிழமை இரவுநேர கேளிக்கை விடுதியில் இரண்டு ஆண்களிடம் பாலியல் ரீதியில் அநாகரிகமாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து கிறிஸ் கட்சியின் துணை அமைப்பாளர் பதவியில் இருந்து விலகினார்.

எனினும் கிறிஸ் மீது பிரதமர் பொரிஸ் ஜோன்சன் சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, நிதி அமைச்சர் ரிஷி சுனக், சுகாதாரத்துறை அமைச்சர் சஜித் ஜாவித் ஆகியோர் பதவி விலகினர்.

இதனையடுத்து சட்டத்துறை அமைச்சரான லாரா டிராட் குடும்ப நலத்துறை அமைச்சர் வில் குயின்ஸ் ஆகியோரும் தங்களது பதவியை விட்டு விலகினர்.

இந்தநிலையில் ஏற்கனவே கொரோனா ஊரடங்கு காலத்தில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பு ஒரே நாளில் இங்கிலாந்தின் 4 முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவி விலகல் என்ற தொடர் பிரச்சினைகளால் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.