நெருக்கடி நிலையில் சிறு தேயிலை தோட்ட செயற்பாடுகள் பாதிப்பு

Sunday, 10 July 2022 - 20:48

%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
தற்போதைய நெருக்கடி நிலையில் சிறு தேயிலை தோட்ட செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

1883ஆம் ஆண்டு ஜூலை மாதம் தேயிலை ஏல விற்பனை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

வெளிப்படை தன்மையினை கொண்ட இந்த ஏல விற்பனை மூலம் தேயிலை தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள் சிறந்த பலனை பெற்றனர்.

இதன் காரணமாக குறிப்பாக தேயிலை உற்பத்தியாளர்கள் மற்றும் தேயிலை ஏற்றுமதியாளர்கள் தேயிலையின் பெறுமதி மற்றும் தரம் என்பன போன்ற முதல் தர தகவல்களை பெற முடிந்தது.

எப்படியிருப்பினும், தற்போதைய ஸ்திரமற்ற பொருளாதார தன்மை காரணமாக இலங்கை ரூபாவின் மதிப்பு சரிவின் பலன்கள் உற்பத்தியாளர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக கருதப்படுகிறது.

இதனால், சிறிய அளவில் தேயிலை உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களை அதிகம் பாதித்துள்ளதாக தேயிலை வர்த்தக தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும், இலங்கையில் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டுள்ள போதிலும், தேயிலை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி என்பன குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என தேயிலை வர்த்தக தரப்பினர் தெரிவித்துள்ளர்.