ஜோ டைன் இஸ்ரேலுக்கு விஜயம்!

Thursday, 14 July 2022 - 8:08

%E0%AE%9C%E0%AF%8B+%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%21
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தற்போது இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்.

ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாக இது அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது, பாலஸ்தீனம், இஸ்ரேல் மற்றும் சவுதிஅரேபிய தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ரஷ்யாவுக்கு நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்களை உதவியாக வழங்க, ஈரான் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க முன்னதாக குற்றம் சுமத்தியிருந்தது.

யுக்ரைனின் கிழக்கு பகுதியில் தொடர்ந்தும் கடுமையான போர் இடம்பெற்று வரும் நிலையில், அதனை மேலும் முன்னெடுத்து செல்ல இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக வெள்ளை மாளிகையின் உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளின் அடிப்படையில் ஆளில்லா விமான பயிற்சிகளை ரஷ்யாவுக்கு ஈரான் வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ஆளில்லா விமானங்களை ரஷ்யாவுக்கு வழங்கியதாக இதுவரையில் எவ்வித உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் வெளியாகவில்லை தெரிவிக்கப்படுகிறது.

தமது போருக்கு, ஆயிரம் ஆளில்லா விமானங்களை நன்கொடையாக வழங்குமாறு உக்ரைன் ஏனைய நாடுகளிடம் கோரியிருந்தது. முன்னதாக சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்த, யேமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் ஈரானிய ஆளில்ல விமானங்களை பயன்படுத்தியிருந்ததாகவும் வெள்ளை மாளிகையின் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இஸ்ரேல் மற்றும் சவுதி அரேபியாவுக்கு இந்தவாரம் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், குறித்த தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.