அஜித் படத்தில் பிரபல பொலிவூட் நடிகர்?

Friday, 29 July 2022 - 15:05

%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%3F
நடிகர் அஜித் தற்போது இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார்.

'ஏகே 61' எனத் தற்காலிகமாகத் தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார்.

மேலும், சமுத்திரக்கனி, வீரா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனிக் கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் 'ஏகே 61' படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பொலிவூட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில் சஞ்சய் தத் சென்னையில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சஞ்சய் தத் அண்மையில் வெளியான கே.ஜி.எஃப் படத்தில் அதீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அண்மையில் ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்திற்காக சென்றிருந்த அஜித்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

அதன் பிறகு திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 47ஆவது துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித் கலந்து கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அஜித் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் விரைவில் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.