பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரையில் அவுஸ்திரேலியா முதல் இடத்தில்

Sunday, 31 July 2022 - 16:03

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

13 தங்கம், 8 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 32 பதக்கங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது.

நியூசிலாந்து , 7 தங்கம், 4 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்களுடன், இரண்டாம் இடத்திலும், 5 தங்கம், 12 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 21 பதக்கங்களுடன் இங்கிலாந்து மூன்றாம் இடத்திலும் உள்ளது.

3 தங்கப் பதக்கங்களுடன் கனடா 4ஆம் இடத்திலும், ஸ்கொட்லாந்து 2 தங்கப் பதக்கங்களுடன் 5ம் இடத்திலும் உள்ளன.