அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முன்னிலையில்!

Monday, 01 August 2022 - 16:02

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%21
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் 2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

22 தங்கம், 13 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 52 பதக்கங்களை அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள இங்கிலாந்து 11 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலம் அடங்கலாக 34 பதக்கங்களை பெற்றுள்ளது.

அதேநேரம், 10 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களுடன், நியுஸிலாந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.

4 தங்கப் பதக்கங்களுடன் தென்னாப்பிரிக்கா 4 ஆம் இடத்திலும், 3 தங்கப் பதக்கங்களுடன் கனடா 5 ஆம் இடத்திலும் உள்ளன.

இந்த பட்டியலில் ஒரு வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ள இலங்கை அணி 23 ஆவது இடத்தில் உள்ளது.