அல் - கெய்தா அமைப்பின் தலைவர் அமெரிக்காவின் தாக்குதலில் பலி!

Tuesday, 02 August 2022 - 11:58

%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%21
அல் - கெய்தா அமைப்பின் தலைவர் அல் - ஜவாஹிரி அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தரப்பினர் நடத்திய ஆளில்லா விமானக் கருவி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானின் காபுல் பகுதியில் அமெரிக்க சி.ஐ.ஏ படையினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார். அல் - கெய்தா அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டமையை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன் மூன்று தகவல்களை மேற்கோள்காட்டி சி.பி.எஸ் செய்தி சேவை அல்-கெய்தா இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் சில சர்வதேச ஊடகங்கள் பெயர் குறிப்பிடப்படாத தகவல்களை மேற்கோள்காட்டி அவர் கொல்லப்பட்டமையை உறுதிப்படுத்தியுள்ளன.

அல்-கெய்தாவின் தலைவர் ஒசாமா பின் லேடன் 2011ஆம் ஆண்டு கொல்லப்பட்டதன் பின்னர் அதன் தலைமை பொறுப்பை அல்-ஜவாஹிரி ஏற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் அல்-கெய்தாவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றியளித்துள்ளதாக அமெரிக்காவின் உயர் அதிகாரி ஒருவர் முன்னதாக அறிவித்தார்.

வார இறுதியில் பொது மக்களின் நடமாட்டம் குறைவாக உள்ளமையினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.