வெளியானது ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை

Tuesday, 02 August 2022 - 21:56

++%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%88
ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி, இந்தத் தொடர் ஆரம்பமாகவுள்ளதுடன், இறுதிப் போட்டி செப்டம்பர் 11ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்காதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான 5 அணிகள், குழுநிலையில் உள்ளன.

தகுதிகான் சுற்றில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியம், குவைட், சிங்கப்பூர் மற்றும் ஹொங் கொங் முதலான நான்கு அணிகளில், ஒரு அணி குழுநிலைக்கு தகுதிபெறும்.

குழு பீ இல், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே, எதிர்வரும் 27ஆம் திகதி துபாயில் முதலாவது போட்டி நடைபெறவுள்ளது.

குழு ஏ இல் முதலாவது போட்டி, இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

செப்டம்பர் மாதம் 2ஆம் திகதிவரை குழுநிலை போட்டிகள் இடம்பெறவுள்ளன.

குழுநிலையில் உள்ள ஆறு அணிகளில், புள்ளிகளின் அடிப்படையில், சுப்பர் - 4 எனப்படும் சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதிபெறும்.

சுப்பர் - 4 சுற்று, செப்டம்பர் 3ஆம் திகதி முதல், 9ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளது.

இறுதிப் போட்டி, செப்டம்பர் 11ஆம் திகதி துபாயில் நடைபெறவுள்ளது.