வெளிநாட்டு நாணயங்களின் விபரங்கள் கோரப்படாது: அரசாங்கம் அறிவிப்பு

Tuesday, 02 August 2022 - 22:10

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%3A+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
வெளிநாட்டு நாணயங்களை வைத்திருந்தால் அவை எங்கிருந்து கிடைத்தன என்ற விபரங்களை வழங்காமலேயே வங்கிகளில் பாதுகாப்பாக மாற்ற முடியும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

உண்டியல் மற்றும் ஹவாலா போன்ற சட்டவிரோத பணப்பரிமாற்ற முறைகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

அவற்றினூடாக நாட்டுக்கு இழப்பு ஏற்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பணத்தை அனுப்புவதற்கு சட்டரீதியான முறைமைகளை பின்பற்றுமாறு ஊக்குவிக்கப்படுகிறது.

அவ்வாறு சட்டரீதியாக பணத்தைப பரிமாற்றும் போது அவர்களுக்கு விசேட சலுகைககள் வழங்கப்படும்.

குறிப்பாக இலங்கைக்கு அனுப்புகின்ற வெளிநாட்டு நாணயத்தின் அளவில் அரைவாசி பெறுமதிக்கு வெளிநாட்டில் இருந்து மின்சார வாகனம் ஒன்றை இறக்குமதி செய்யவும், அதற்கு தீர்வை சலுகையை வழங்கவும் அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.