ஆந்திராவில் விஷவாயு கசிவினால் 121 பெண் தொழிலாளர்கள் பாதிப்பு

Wednesday, 03 August 2022 - 16:27

%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+121+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
இந்தியாவின் ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள விதை உற்பத்தி தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட விஷ வாயு கசிவினால் 121 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிகிச்சைகளுக்கான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் இதனையடுத்து, விதைகளை உற்பத்தி செய்யும் குறித்த நிறுவனத்தை மறு அறிவித்தல் மூடுமாறு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று மாலை 6.45 மணி முதல் 7.30 மணி வரையான காலப்பகுதியினுள் 121  பெண் தொழிலாளர்களுக்கு வாந்தி மற்றும் குமட்டல் ஏற்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இதே தொழிற்சாலையில் இதே போன்ற சம்பவம் நடந்தது.

மீண்டும் இதே போன்ற அறிகுறிகள் தொழிலாளர்கள் மத்தியில் பதிவாகியதால் அவர்கள் உடனடியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களின் உடல் நிலை சீராகவுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்திய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி,  உண்மைகள் கண்டறியப்படும் வரை தொழிற்சாலையை மூட உத்தரவிட்டார்.