பின்லாந்து - சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைக்க அமெரிக்க செனட் சபை அனுமதி

Thursday, 04 August 2022 - 14:39

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+-+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF
பின்லாந்து மற்றும் சுவீடன் ஆகிய நாடுகளை நேட்டோ அமைப்பில் இணைத்துக்கொள்வதற்கு அமெரிக்க செனட் சபை அனுமதி வழங்கியுள்ளது.

யுக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு பின்னர், குறித்த இரண்டு நாடுகளும் நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்திருந்தன.

எனினும், அவை நேட்டோ அமைப்பில் இணைய வேண்டுமானால், வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் கீழ் உள்ள உறுப்பு நாடுகளில் 30 நாடுகளின் நாடாளுமன்றங்கள், ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.

அவ்வாறு ஆதரவு வழங்கும் பட்சத்திலேயே நேட்டோ அமைப்பில் அந்த நாடுகள் இணைந்துக்கொள்ள முடியும் என்பதுடன், பாதுகாப்பு வழங்கப்படும்.

இரண்டு நாடுகளின் இணைப்புக்கு ஆதரவாக செனட் சபையில் 95 க்கு 1 என்ற கணக்கில் வாக்களிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 30 நேட்டோ நாடுகளில் அமெரிக்கா 23 ஆக வாக்களித்துள்ளது.

முன்னதாக இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.