உந்துருளில் பயணித்த நபர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை!

Friday, 05 August 2022 - 15:24

%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%21
வத்தளை – எடம்பொலவத்த வீதியில் உந்துருளில் பயணித்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

குறித்த நபரை நேற்றைய தினம் இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்த நபர், தமது வீட்டிலிருந்து வேலைத்தளத்திற்கு உந்துருளியில் செல்லும் போது இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிடுகிறது.

தனியார் நிறுவனமொன்றில் களஞ்சியசாலை உதவியாளரான குறித்த நபர் 41 வயதுடைய வத்தளை – எந்தல பகுதியை சேர்ந்தவராவார்

சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.