நாட்டில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை நடத்தியவர்கள் பயணித்த உந்துருளிகளின் இலக்க தகடுகள் போலியானவை

Friday, 05 August 2022 - 15:30

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88
நாட்டின் சில பாகங்களில் இடம்பெற்றுள்ள துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை நடத்தியவர்கள் பயணித்த உந்துருளிகள் மற்றும் மகிழுந்துகள் என்பனவற்றின், இலக்கத் தகடுகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

அவை வெவ்வேறு பகுதிகளில் உள்ள வாகனங்களில் இருந்து திருடப்பட்ட இலக்கத் தகடுகளாகும் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, உந்துருளிகள், மகிழுந்துகள் உட்பட ஏனைய வாகனங்களை வீதியிலோ அல்லது வேறு இடத்திலோ நிறுத்திவிட்டுச் செல்லும்போது, அது குறித்து கவனம் செலுத்துமாறு காவல்துறை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக இரவு நேரத்தில், பாதுகாப்பற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்தாதிருக்குமாறும் பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றால், அது குறித்து உடனடியாக அருகிலுள்ள காவல்துறை நிலையத்தில் முறையிடுமாறும் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.