தலவாக்கலை லிந்துலை லோகி தோட்டத்தில் நாய் ஒன்றை வேட்டையாடச் சென்ற சிறுத்தை ஒன்று வீட்டின் கூரை வழியாக வீட்டுக்குள் வீழ்ந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
வீடு ஒன்றில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றை வேட்டையாடுவதற்காக கூரைக்கு தாவிச் சென்ற சிறுத்தைஇ கூரையை உடைத்துக்கொண்டு வீட்டினுள் வீழ்ந்ததாக வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது வீட்டில் இருந்தவர்கள்இ அங்கிருந்து உடனடியாகவே வெளியேறியுள்ளனர்.
இதன் பின்னர் சுமார் 16 மணிநேரம் வீட்டில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு கால்நடை மருத்துவர் மயக்க மருந்தை செலுத்தினார்.
மயக்க மருந்து செலுத்தி பிடிபட்ட சிறுத்தையை பொருத்தமான சூழலுக்கு விடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன் பகுதியில் மலைச்சிறுத்தைகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.