கல்கிசை நீதிமன்ற கட்டடத்தொகுதியில் துப்பாக்கி பிரயோகம்: இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்

Friday, 05 August 2022 - 23:14

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%3A+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D
கல்கிசை நீதிமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கி பிரயோக சம்பவம் தொடர்பில் கடமையிலிருந்த இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டிடத் தொகுதியில், நேற்றைய தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், வெளியில் இருந்து சென்ற நபர் ஒருவர், சாட்சிக்கூண்டில் இருந்தவரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்திருந்தது.

குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய காவல்துறை தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.