ராஹூல் காந்தி - பிரியங்கா காந்தி வத்ரா கைது!

Friday, 05 August 2022 - 23:19

+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+-+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81%21
இந்திய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களான ராஹூல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விலை உயர்வு மற்றும் வேலையில்லா பிரச்சினையை கண்டித்து, டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர்; இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஹூல் காந்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனையடுத்து குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.