செஸ் ஒலிம்பியாட் சதுரங்க தொடர் நிறைவு

Wednesday, 10 August 2022 - 9:44

%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81
தமிழ்நாடு - சென்னை மாமல்லபுரத்தில் இடம்பெற்ற 44ஆவது செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டித் தொடர் நேற்று நிறைவடைந்தது.

கடந்த மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் நிறைவு விழா, சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.

186 நாடுகள் பங்கேற்ற இந்த போட்டியின் ஆடவர் பகிரங்கப் பிரிவில் 188 அணிகளும், மகளிர் பிரிவில் 162 அணிகளும் கலந்து கொண்டன. பகிரங்க பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றது.

அந்த அணிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கப் பதக்கம் வழங்கியதுடன், குதிரை வடிவம் கொண்ட தம்பி நினைவு பரிசையும் வழங்கினார்.

2ஆம் இடம் பிடித்த ஆர்மேனியா அணி வெள்ளிப்பதக்கத்தையும், 3ஆம் இடத்தைப் பெற்ற இந்திய பி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.

இந்திய பி அணியின், பிரக்ஞானந்தா, குகேஷ், சரின் நிகல் மற்றும் சத்வானி ரவுனக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

சென்னையில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் சதுரங்க போட்டி வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்த செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் உள்ள எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது.