இலங்கையும் கனடாவும் உடன்படிக்கையில் கைச்சாத்து!

Tuesday, 16 August 2022 - 21:32

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%21
இலங்கையும் கனடாவும் தன்னார்வ ஒத்துழைப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன.

கொழும்பில் இன்று உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மற்றும் இலங்கையின் நிதி பொருளாதார துறை அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்த்தன ஆகியோர் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

வறிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட இளைஞர்கள் குறிப்பாக பெண்களுக்கு நிலையான புத்தாக்கம் மிகுந்த உதவிகளை வழங்குவதை நோக்காக கொண்டு இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.