அவுஸ்திரேலியாவிடம் தோல்வியுற்றமைக்கு ரோஹித் கூறும் காரணம்

Wednesday, 21 September 2022 - 14:19

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
0சிறந்த முறையில் பந்துவீசத் தவறியமையே அவுஸ்திரேலிய அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தமைக்கு காரணம் என இந்திய அணித் தலைவர் ரோஹிட் சர்மா தெரிவித்துள்ளார்.

மொஹாலியில் நேற்று இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில், அவுஸ்திரேலிய அணி, 4 விக்கட்டுக்களால் வெற்றிபெற்றது.

இந்த நிலையில், தோல்வி குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய அணித் தலைவர் ரோஹிட் சர்மா, தாங்கள் சிறப்பாக பந்து வீசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

200 ஓட்டங்கள் என்பது ஒரு நல்ல இலக்காகும். களத்தில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை நாங்கள் பயன்படுத்தவில்லை. இது எங்கள் துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த முயற்சி.

ஆனால் பந்துவீச்சாளர்களின் ஒத்துழைப்பு இல்லை. 200 ஓட்டங்களை எடுத்தாலும் நிதானமாக இருக்க முடியாது. நாங்கள் விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள் என ரோஹிட் சர்மா கூறியுள்ளார்.