ஒரு மாதத்திற்குள் தனியார் மயமாகவுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்

Thursday, 22 September 2022 - 13:51

%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 1250 எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களை தனியாருக்கு வழங்குவதற்கான வேலைதிட்டத்தின் மீளாய்வு கூட்டத்தின் போதே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் குறித்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் கட்டுப்பாட்டினை பெற்றுக்கொள்ளும் தனியார் நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரங்களை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபத்தின் எரிபொருள் நிலையங்களை தனியாருக்கு விற்பனை செய்யும் திட்டத்திற்கு அமைய இதுவரை 24 நிறுவனங்களிடமிருந்து கேள்வி பத்திரத்துக்கான இணக்க மனு கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.