சுங்கத்தினர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!

Monday, 26 September 2022 - 10:09

%E0%AE%9A%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%21
புலம்பெயர்ந்த பணியாளர்கள் மற்றும் அங்கு வசித்துவருபவர்கள் இலங்கைக்கு பொருட்களை அனுப்பும்போது, சுங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாக மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஊடாக பொருட்களை அனுப்புவதை தவிர்க்குமாறு இலங்கை சுங்கம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பரிசு பொருட்கள், பயணப்பொதிகள் மற்றும் ஏனைய பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும் போது, அவை காணாமல்போதல் மற்றும் சேதமடைவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு சுங்க திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.