காங்கேசன்துறை - இந்தியாவுக்கிடையிலான பயணிகள் கப்பல் சேவை குறித்து ஆராய்வு

Sunday, 02 October 2022 - 22:57

%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+-+%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
காங்கேசன்துறைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை குறித்து ஆராயப்படுவதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையினை தலைமன்னார் வரை விஸ்தரிப்பது குறித்தும் ஆராயப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் சேவைத்துறையுடன் தொடர்பு கொண்டவர்கள மத்தியில் அவர் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

இதேவேளை, காலி துறைமுகத்தையும் விஸ்தரித்து, சர்வதேச தரத்தை கொண்ட துறைமுகமாக்குவது குறித்தும் ஆராய்ந்து வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்து கைத்தொழில் துறைமுகமாக்குவதற்கான அமைச்சரவையின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார்.