தண்ணீருக்காக வரிசையில் நிற்கும் யுக்ரைன் மக்கள்!

Tuesday, 01 November 2022 - 9:44

%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%21
ரஷ்யாவினால் முக்கிய உட்கட்டமைப்பு வசதிகளை இலக்கு வைத்து நேற்று நாடளாவிய ரீதியாக நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து யுக்ரைனில் மக்கள் தண்ணீருக்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் கிவ்வில் 40 சதவீதமான மக்கள் நீரின்றி உள்ளதாக அந்த நகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 2 லட்சத்து 70 ஆயிரம் வீடுகளுக்கான மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல்களில் நாடளாவிய ரீதியாக 13 பேர் காயமடைந்துள்ளனர்.

யுக்ரைனின் இராணுவக் கட்டுப்பாட்டு மற்றும் வலுசக்தி சக்தி கட்டமைப்புகளை இலக்கு வைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

வார இறுதியில் ரஷ்ய போர் கப்பல் மீதான உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

எனினும் ரஷ்யாவின் ஏவப்பட்ட 55 ஏவுகணைகளில் 45 ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக யுக்ரைன் அறிவித்துள்ளது.