33 ஓட்டங்களால் பாகிஸ்தானுக்கு வெற்றி!

Thursday, 03 November 2022 - 18:14

33+%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%21
இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில், சுப்பர் 12 சுற்றில் இன்றைய தினம் குழு 2 இன் பாகிஸ்தான் - தென் ஆபிரிக்க அணிகள் மோதிக்கொண்டன.

இதில், பாகிஸ்தான் அணி டக்வர்த் லூயிஸ் முறையில் 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இப்போட்டியில், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது.
Babar Azam and Temba Bavuma pictured at the toss, Pakistan vs South Africa, ICC Men's T20 World Cup 2022, Sydney, November 3, 2022

துடுப்பாட்டத்தில், சதாப் கான் 52 ஓட்டங்களையும், இஃப்திகார் அஹமட் 51 ஓட்டங்களையும், மொஹமட் ஹரிஸ் மற்றும் மொஹமட் நவாஸ் ஆகியோர் தலா 28 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் தென் ஆபிரிக்க அணியின் அன்ரிச் நோர்ட்ஜே 41 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த நிலையில், 186 ஓட்டங்களை என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு தென் ஆபிரிக்க அணி துடுப்பாடியபோது, மழைக்குறுக்கிட்டதையடுத்து போட்டி இடைநிறுத்தப்பட்டது.

Covers were called for with rain falling persistently, Pakistan vs South Africa, ICC Men's T20 World Cup 2022, Sydney, November 3, 2022

அதன்போது, தென் ஆபிரிக்க அணி 9 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 69 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இதனையடுத்து, மழை நின்ற நிலையில், போட்டியின் வெற்றி இலக்கு 142 ஓட்டங்களாக குறைக்கப்பட்டு, போட்டி 14 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, புதிய இலக்கை நோக்கி மீண்டும் துடுப்பாடத்தை தொடர்ந்த தென்னாபிரிக்க அணி, 14 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை பெற்றுதோல்வியை தழுவியது.

அணிசார்பில், அணித்தலைவர் டெம்பா பவுமா 36 ஓட்டங்களை அதிகபடியாக பெற்றார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் சதாப் கான் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக சதாப் கான் தெரிவானர்.

Shadab Khan raced to a 20-ball fifty, Pakistan vs South Africa, ICC Men's T20 World Cup 2022, Sydney, November 3, 2022