'கலகத் தலைவன்' படத்தின் ட்ரைலர் வெளியீடு!

Friday, 11 November 2022 - 17:41

%27%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%27+%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81%21
தடையறத் தாக்க, மீகாமன், தடம் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள திரைப்படம் 'கலகத் தலைவன்'.

இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.

'கலகத் தலைவன்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது வெளியீட்டுக்கான பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படத்தின் முதல் பார்வை அண்மையில் வெளியான நிலையில், படத்தின் டீசரும் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், 'கலகத் தலைவன்' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (10) இடம்பெற்றது.

இவ்விழாவில் படத்தின் ட்ரைலர் வெளியான நிலையில், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விழாவில் படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்குநர்கள் மிஷ்கின், மாரிசெல்வராஜ், பிரதீப், சுந்தர்.சி, நடிகர்கள் அருண் விஜய், விஷ்ணு விஷால் மற்றும் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.