உற்பத்தி கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் ஒக்டோபரில் வீழ்ச்சி

Thursday, 17 November 2022 - 15:15

%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF
உற்பத்தி கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் கடந்த ஒக்டோபர் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கடந்த மாதத்தை காட்டிலும் 4.2 சுட்டெண் புள்ளிகள் வீழ்ச்சியடைந்து ஒக்டோபரில் 38.4 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்துள்ளது.

பணிகள் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், கடந்த ஒக்டோபர் மாதத்தில் 47.9 சுட்டெண்ணாக பதிவாகி, அதன் நடுநிலையான அடிப்படை அளவிற்குக் கீழ் வீழ்ச்சியடைந்தது.

புதிய வியாபாரங்கள், தொழில்நிலை மற்றும் நிலுவையிலுள்ள பணி என்பவற்றில் அவதானிக்கப்பட்ட வீழ்ச்சிகள் இதற்குக் காரணமாக அமைந்தன.

எவ்வாறாயினும், தொழில் நடவடிக்கைகள் அதிகரிப்பினை காட்டுவதாக இலங்கை மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.