அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி

Thursday, 17 November 2022 - 18:58

%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF+6+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களை பெற்று கொண்டது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மாலன் 134 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்துவீச்சில் அவுஸ்திரேலிய அணியின் எடம் சாம்பா, பேட் கம்மின்ஸ் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 46.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் அவுஸ்ரேலிய அணி சார்பாக டேவிட் வோர்னர் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.