விஜய்க்காக களத்தில் இறங்குவேன் - சீமான்

Sunday, 20 November 2022 - 16:51

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பொங்கல் கொண்டாட்டமாக திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கூட்டத்தில் பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் படங்களை ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் இதுகுறித்து இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

"ஆந்திராவில் 'வாரிசு' வெளியாகாவிட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்" என சீமான் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை - திருவொற்றியூரில் நடந்த நிகழ்வொன்றின் போதே சீமான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து சீமான் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.