இந்தோனேஷிய நிலநடுக்கம் - பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு

Tuesday, 22 November 2022 - 8:26

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+162+%E0%AE%86%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81
இந்தோனேஷிய ஜாவா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.

மேற்கு ஜாவா சியன்ஜூர் நகரத்தை அண்மித்த கடலின் 106 கிலோ மீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.6 மெக்னனிடியூட்டாக நேற்று இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

இந்த நில அதிர்வு காரணமாக நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

அவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இந்தோனேஷிய பிராந்திய ஆளுநர் ரித்வான் கமில் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் உயிர்சேதங்கள் மேலும் அதிகரிக்கலாம் என மருத்துவ தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநில அதிர்வினால் 2 ஆயிரத்து 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.

கட்டிட இடிபாடுகளில் சிக்குண்டுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்பு பணியாளர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

அனர்த்தம் இடம்பெற்ற இடத்தில் மீண்டும் நில அதிர்விற்கான வாய்ப்புக்கள் உள்ளதால், அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களை கட்டிடங்களுக்கு வெளியே தற்காலிகமாக தங்கும்படி இந்தோனேஷிய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதன்காரணமாக 13 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.