80% பாடசாலை வருகை பதிவு கட்டாயம் - கல்வி அமைச்சு

Monday, 28 November 2022 - 17:53

80%25+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
அடுத்த ஆண்டு முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமானது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமில்லை என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அடுத்த வருடம் முதல் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு 80% பாடசாலை வருகை பதிவு அவசியமானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.