ஆட்கடத்தல் தொடர்பில் கைதான தூதரக முன்னாள் அதிகாரிக்கு விளக்கமறியல்!

Tuesday, 29 November 2022 - 14:31

%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%21
கைதுசெய்யப்பட்ட ஓமானிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்னாள் மூன்றாம் நிலை செயலாளர் ஈ. குஷான், எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளில் மனித கடத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளர் ஈ.குஷான் பணி இடைநீக்கப்பட்டார்.

இந்த நிலையில், இன்று அதிகாலை நாடு திரும்பியபோது, கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இதையடுத்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.