வடபிராந்திய போக்குவரத்து சேவைகள் வழமைக்கு திரும்பின!

Tuesday, 29 November 2022 - 17:02

%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%21
இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய பேரூந்து சாலை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளதுடன் இன்று (29) மதியம் இரண்டு மணியில் இருந்து போக்குவரத்து சேவைகள் ஆரம்பித்துள்ளன.

காவல்துறை அதிகாரிகளின் வாக்குறுதிக்கமைய குறித்த போராட்டம் கைவிடப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

யாழ்ப்பாண பேரூந்து சாலையின் ஊழியர்கள் நேற்று (28) காலை முதல் தீடீர் தொழிற்சங்க நடவடிக்கையாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக பொதுமக்கள், அலுவலக ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாதிப்புக்களை எதிர்கொண்டனர்.

சில நாட்களுக்கு முன்பு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் ஒருவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தாக்கிய நபர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தாக்கிய நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியே தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இ.போ.ச. யாழ் பேரூந்து சாலை ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு ஆதரவாக வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழு பேரூந்து சாலைகளும் ஒன்றிணைந்து இன்றைய தினம் காலை வேளையில் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.