தமது உணர்வுகளுடன் விளையாடி, சுகேஷ் சந்திரசேகர் தமது வாழ்க்கையை நரகமாக்கிவிட்டார் என இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இரட்டை இலை சின்னம் பெறுவதற்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் மீது 15 மோசடி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் சிறையில் இருந்த போது அவர் பெண் ஒருவரை அச்சுறுத்தி அவரிடம் இருந்து கோடி கணக்கான பணத்தை பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த பணத்தில் அவர், நடிகை ஜாக்குலினுக்கு பல கோடி ரூபா பெறுமதியான பரிசு பொருட்களை வழங்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனை, ஜாக்குலினும் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்தநிலையில் சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதில் சுகேஷ் தமது வாழ்க்கையை அழித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சுகேஷின் குற்றப் பின்னணி வெளியான பிறகே அவரது உண்மையான முகம் தனக்குத் தெரியவந்ததாகவும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் கூறியுள்ளார்.