மேற்குலகின் ஆயுத விநியோகம் தொடர்பில், உறுதியான தீர்மானங்களை எதிர்பார்ப்பதாக யுக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர் ஸெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் உள்ள அமெரிக்காவின், ராம்ஸ்டீன் விமானப் படைத் தளத்தில், சில மேற்குலக நாடுகளின் முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய தினம் குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டபோது, யுக்ரைன் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிடமிருந்து, சக்திவாய்ந்த இராணுவ உதவிப் பொதியை எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, மேற்குலக நாடுகள், தமது ஆதரவு நாடுகளுக்கு, ரஷ்யாவைத் தாக்கும் திறன்கொண்ட ஆயுதங்களை வழங்கினால், யுக்ரைனில் யுத்தம் மேலும் தீவிரமடையும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
இது மோதலை ஒரு புதிய நிலைக்கு கொண்டு வருவதைக் குறிக்கும் என க்ரெம்ளின் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.