21 குழந்தைகளுக்கு தாயான ஹன்சிகா

Friday, 20 January 2023 - 12:56

21+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B9%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE
கடந்த டிசம்பர் 4 ஆம் திகதி தொழிலதிபர் சொஹைல் கத்துரியா என்பவரை நடிகை ஹன்சிகா திருமணம் செய்து கொண்டார்

அதையடுத்து தேனிலவுக்காக பல்வேறு நாடுகளுக்கு சென்ற அவர் அண்மையில் ஒரு விளம்பர படத்தில் நடித்தார்.

இந்நிலையில் இன்று (20) முதல் இடைவிடாமல் படங்களில் தான் நடிக்கப் போவதாக அவர் முன்னதாக தெரிவித்திருந்தார்.

அத்துடன் தற்போது தனது கைவசம் ஏழு படங்கள் மட்டுமின்றி 2 இணைய தொடர்களும் இருப்பதாகவும் கூறும் ஹன்சிகா, திருமணத்திற்கு பிறகும் தான் ஓய்வின்றி நடித்துவருவதாக தெரிவித்தார்.

அது மட்டுமின்றி சினிமாவில் தான் முன்னணி கதாநாயகியாக ஆனதிலிருந்து 21 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறேன். அவர்களை வளர்க்கும் ஒரு அம்மாவாக இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

இந்நிலையில் அவர்களுக்கு தைப்பொங்கலை முன்னிட்டு புத்தாடை எடுத்துக் கொடுத்ததாக கூறும் ஹன்சிகா, சினிமாவில் நடிப்பதை கடந்து இதுபோன்று மற்றவர்களுக்கு உதவி செய்வது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

நான் இப்படி குழந்தைகளை தத்து எடுத்து வளர்ப்பதற்கு முக்கிய காரணமே எனது அம்மாதான்.

இதன் மூலம் எனக்கு கிடைத்து வரும் இந்த மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்று ஹன்சிகா ஒரு நெகிழ்ச்சி பதிவு வெளியிட்டு இருக்கிறார்.