அமெரிக்காவில் தற்போது வேகமாக பரவி வரும் கொவிட் 19 தொற்றின் மாறுபாடான எக்ஸ் பீ பீ 1.5 மாறுபாடு அங்குள்ள சனத்தொகையில் அரைவாசியை பாதித்திருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தினால் நேற்று (20) வெளியிடப்பட்ட தரவுகள் இதனைத் தெரிவிக்கின்றன.
இதன்படி, அமெரிக்காவில், தற்போது 49.1 சதவீத கொவிட் பாதிப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அது கடந்த வாரம் 37.2 சதவீதமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.