2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - யோசனையை முன்வைத்தது ஐசிசி

Sunday, 22 January 2023 - 17:01

2028+%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+-+%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டையும் இணைப்பதற்கான யோசனையை சர்வதேச கிரிக்கெட் பேரவை முன்வைத்துள்ளது.

ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்கும் வகையில் இருபதுக்கு 20 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரை நடத்துவதற்கான யோசனையே பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை இணைத்துக்கொள்வது தொடர்பில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் மும்பையில் இடம்பெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னரும், கிரிக்கெட் போட்டியை ஒலிம்பிக்கில் இணைத்துக்கொள்ளுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இதுவரை அது நிறைவேற்றப்படாதுள்ளன.