சர்வதேச கால்பந்து சம்மேளனம் இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு தடைவிதித்துள்ளது.
கடந்த 14ஆம் திகதி விளையாட்டு அமைச்சினால் நடத்தப்பட்ட தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட நிர்வாகக்குழுவை சர்வதேச கால்பந்து சம்மேனளம் ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில், இது தொடர்பான தடை உத்தரவு இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் உபாலி ஹேவகேவுக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த தேர்தலில் மூன்றாம் தரப்பு தலையீடாக, விளையாட்டுத்துறை அமைச்சரின் தலையீடும், விளையாட்டுத்துறை அமைச்சகம் உறுதியளித்தபடி கால்பந்து சம்மேளனத்தின் யாப்பை திருத்தியமைக்காததும், அதன்படி உறுதிப்பாட்டுக்கமைய செயல்படாததும் இந்தத் தடைக்கு முதன்மைக் காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையின் பிரகாரம், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு வீரர், அதிகாரி, பயிற்றுவிப்பாளர் அல்லது தேசிய அணிக்கு சர்வதேச போட்டிகளிலோ அல்லது வேறு எந்த போட்டிகளிலோ பங்குபற்ற முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.