உயர்தரப் பரீட்சைக்குச் சென்ற மாணவி மீது திராவக வீச்சு!

Tuesday, 24 January 2023 - 11:35

%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%21
கேகாலை – பரகம்மன பிரதேசத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தனது தந்தையுடன் முச்சக்கரவண்டியில் சென்ற 21 வயதான மாணவி ஒருவர் மீது தீராவகம் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவி பயணித்த முச்சக்கர வண்டியை உந்துருளியில் வந்து வழிமறித்த இளைஞன் ஒருவரால் அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் அந்த மாணவியின் காதலன் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

திராவகம் வீசிய போது ஏற்பட்ட குழப்ப நிலையால், மாணவியின் தந்தை, மாணவி மற்றும் குறித்த இளைஞனும் காயமுற்று தற்போது கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திராவக வீச்சை தடுக்க முயன்ற தந்தை, திராவகத்தை மீண்டும் இளைஞன் மீது வீசிய போது ஏற்பட்ட குழப்பத்தால் மூவர் மீதும் திராவகம் பட்டுக் காயமடைந்துள்ளனர்.