இலங்கையின் நிதிக் கடன்கள் ரத்துச்செய்யப்பட வேண்டும் - பொருளாதார வல்லுநர்கள்

Tuesday, 24 January 2023 - 12:16

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
உலகெங்கிலும் உள்ள 180க்கும் மேற்பட்ட முக்கிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அபிவிருத்தி நிபுணர்கள் இலங்கையின் நிதிக் கடன்கள் ரத்துச்செய்யப்பட வேண்டும் என்று விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் கலப்புக்கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கையின் கடன்களை ரத்துச்செய்யுமாறு, கடன் வழங்குநர்களிடம் இந்த வருட ஆரம்பத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுவே, இலங்கையின் வளர்ச்சிக்கு உதவும் என்று குறித்த 180 பொருளாதார வல்லுநர்களும், நிபுணர்களும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

எனினும், ஏனைய பொருளாதார நிபுணர்கள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளதாக அல் ஜசீரா செய்தித்தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, கடந்த டிசம்பர் மாத நிலவரப்படி இலங்கையின் வெளிநாட்டுக் கடன் சுமை 52 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமானதாகும்.

அதில், கிட்டத்தட்ட 40 சதவீதம் நிதி நிறுவனங்கள் உட்பட தனியார் கடன்களாகும். மீதமுள்ளதில் 52 வீதம் சீனாவிடம் இருந்த பெற்றக்கடன்களாகும்.

ஜப்பானிடம் இருந்து 19 சதவீத கடனை இலங்கை பெற்றுள்ளது. இந்தியாவிடம் இருந்து 12 சதவீத கடனை இலங்கை பெற்றுள்ளது.

இந்தநிலையில் பெஸ்ட்செல்லர் கெப்பிட்டல் நூலை எழுதிய தோமஸ் பிகெட்டி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் டானி ரோட்ரிக் மற்றும் இந்தியப் பொருளாதார நிபுணர் ஜெயதி கோஷ் உட்பட பல முக்கிய கல்வியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இலங்கையின் கடனை அனைத்து வெளி கடனாளிகளாலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தனர்.

எனினும் கடன்கள் ரத்துச்செய்யப்பட்டால், அது அதிக வட்டிகளுக்கு கடன்களை பெற்ற ஊழல் அரசியல்வாதிகளுக்கே வாய்ப்பாக அமையும் என்று ஏனைய பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால். தற்போதைய உலகளாவிய நிதிய அமைப்பு வீழ்ச்சியடையும் என்று இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநரான டபிள்யூ.ஏ.விஜேவர்தன உட்பட்டவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

கடன் ரத்துத் திட்டம் செயற்படுத்த வேண்டும் என்று கோரியுள்ள கல்வியாளர்கள் பலர் பொருளாதார வல்லுநர்கள் அல்ல என்று அவர் அல் ஜசீராவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.